Aran Sei

விவசாய உரங்களின் விலையை உயர்த்திய மத்திய அரசு : திரும்பப் பெறக் கோரி போராட விவசாயிகள் முடிவு

ரங்களின் மீதான விலையுயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும் இந்திய விவசாயிகளின் உர கூட்டுறவு சங்கமான இஃப்கோவை விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஏற்கனவே பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்றும் அதிகரித்து வரும் விளைச்சலுக்கான செலவுகள் குறித்தும் விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர் என்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தனது அறிக்கையில் நினைவுட்டியுள்ளது.

உற்பத்தி விலையை மறுத்த தனியார் மண்டி – அறுவடைப் பயிரை அழித்த விவசாயி

“இந்த இக்கட்டான நேரத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைப்பதில்லை. மறுபுறம், விளைச்சலுக்கான அடிப்படை செலவுகள் விளைபொருட்களுக்கான விற்பனை விலையை விட அதிகமாக உள்ளன.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.

இஃப்கோவின் உர விலையுயர்வு பட்டியலை மேற்கோள் காட்டிய அவர், “டி-அம்மோனியம் பாஸ்பேட் விலையானது ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பிற உரங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இது விவசாயிகள் மீதான நேரடியான தாக்குதல். மத்திய அரசின் இந்த அறிவிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். இந்த உயர்வை திரும்பப் பெறக் கோரி போராட்டங்களை  தொடங்குவோம்.” என்று இஃப்கோவையும் மத்திய அரசையும் எச்சரித்துள்ளார்.

Source : The Hindu Businessline

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்