Aran Sei

‘ஜூன் 26 அன்று ஆளுநர் மாளிகைகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்’ – போராடும் விவசாயிகள் அறிவிப்பு

ன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரும் விவசாயிகளின் ஏழு மாத போராட்டங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஜூன் 26 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக போராடும் விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 11), போராடும் விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான இந்தர்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

‘எங்கள் போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்’ – போராடும் விவசாயிகள்

அப்போது, “ஜூன் 26 ஆம் தேதி, விவசாயத்தை காப்பாற்றுங்கள். ஜனநாயக தினத்தை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்தை எழுப்புவோம். ராஜ் பவனில் (ஆளுநர் மாளிகை) கறுப்புக் கொடிகளைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம். குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக இருக்கும் ஒவ்வொரு மாநில ஆளுநரின் வழியாகவும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுக்களை அளிப்போம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜூன் 26 ஆம் தேதியானது, 1975 ஆம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட நாளாகும். அன்றைய தினம் நாங்கள் எங்கள் போராட்டத்தின் ஏழாவது மாதத்தை நி்றைவு செய்கிறோம். சர்வாதிகாரம் படர்ந்து வரும் இச்சூழலில் விவசாயத்துடன், மக்களின் ஜனநாயக உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது அறிவிக்கப்படாத அவசரநிலை காலம்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான இந்தர்ஜித் சிங் விமர்சித்துள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்