Aran Sei

விவசாயிகளின் கோபம் பாஜகவின் அகங்காரத்தை உடைக்கும் – வேளாண் சட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

புதிய வேளாண் சட்டத்தை திரும்பபெறாமல் இந்திய ஒன்றிய அரசு பிடிவாதமாக செயல்பட்டு வருகிறது, விவசாயிகளின் ஒற்றுமை பாஜக அரசின் இந்த அகங்காரத்தை உடைக்கும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்

மேலும், விவசாயிகளைத் துன்புறச் செய்யும் இந்த அரசு, அவர்களது வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதாகக் கூறி அவரது வாக்குகளைப் பெற முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, பாஜக அரசு இந்தச் சட்டத்தால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தியதன் ஒர் ஆண்டு நிறைவு – முழு புரட்சி நாளாக கொண்டா சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அறிவிப்பு

மேலும்,”விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்தினால் ஒட்டுமொத்த விவசாயப் பொருளாதாரமும் வீழ்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது,”வரும் சட்டமன்ற தேர்தலின்போது விவசாயிகள் பாஜகவிற்கு தகுந்த பதிலைத் தருவார்கள்” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாக தி இந்து செய்தி தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்