Aran Sei

‘நிலைப்பாட்டை மாற்றுவது அரசுதான், நாங்கள் இல்லை’ – பிரதமருக்கு விவசாயிகளின் பதில்

Image Credits: Money Control

விவசாய சங்கங்கள் தினமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே உள்ளன என்ற ஒரு குற்றசாட்டை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். இதற்குப் பதில் அளித்த அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, “உறுதியாக, உத்தரவாதமாக மற்றும் சட்டப்பூர்வமாக அணைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் ஒரே கோரிக்கை” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

’போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ – விவசாயத் துறை அமைச்சர்

பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ.18,000 கோடி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதன் ஒரு தவணையை வழங்கும் விழாவில் பேசிய மோடி, “ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் கொண்டவர்கள், விவசாயிகளின் கிளர்ச்சியைத் தூண்டி, நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயிகளின் நலனைப் பற்றி அக்கறை இல்லை, அரசியல் காரணங்களுக்காகத் தினமும் புதிய பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். அவர்கள் அரசுடன் கலந்துரையாடுவதற்கு விவசாயிகளை அனுமதிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதில் அளித்துள்ள அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அவிக் சஹா, “பிரதமர் மக்களைக் குழப்புவதை நிறுத்த வேண்டும், போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. விவசாயிகளுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அவர்களுக்கு உறுதியான, உத்தரவாதமான மற்றும் சட்டபூர்வமான வருவாயை வழங்குங்கள். அதனை குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதன் மூலமும் செய்யலாம், நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் இதன் வழியாகப் பயனடைகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். இது சட்டப்பூர்வ உத்தரவாதமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த ஒடிசா தீர்மானம்

மக்களை குழப்பும் பிரதமரின் முயற்சி பலனளிக்காது என்றும் பெரிய நிறுவனங்களுக்காகச் சேவை செய்வதை பிரதமர் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “அரசின் நிலைப்பாட்டில் தான் மற்றம் உள்ளதே தவிர விவசாயிகளின் நிலைப்பாட்டில் மற்றம் இல்லை. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும், எங்கள் சந்ததியினருக்கு பாதுகாப்பான எதிர்காலத்தையும் வழங்க வேண்டும் என்று மட்டும்தான் நாங்கள் விரும்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ராஜஸ்தானின் ஷாஜாப்பூரை அடைந்து, டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தர்ணாவில் அமர்ந்துள்ளனர். ஹரியானா காவல்துறையினர் மாநிலத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்