Aran Sei

‘விவசாய சட்டங்களுக்கு எதிராக மார்ச் 26 கர்நாடக பந்த்’ – அழைப்புவிடுத்த கர்நாடக விவசாயிகள்

த்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக சம்யுக்ட் கிசான் மோர்ச்சா நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பெங்களூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நேற்று (மார்ச் 22), கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் ஹசிரு சேனா தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்ச் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள கர்நாடக பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய குழு, அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம் மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் கர்நாடகா போன்ற பல்வேறு தொழிலாளர் சங்கங்களும் உரிமைகளுக்கு போராடும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.

“மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்தத் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. மூன்று விவசாய சட்டங்கள் எவ்வாறு தங்களை பாதிக்கும் என்பதை கர்நாடக விவசாயிகள் புரிந்துக்கொண்டார்கள். விவசாய சட்டங்கள், எரிபொருள்களின் விலையுயர்வு, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக மார்ச் 26 ஆம் தேதி சம்யுக்த் கிசான் மோர்ச்சாவால் அழைப்புவிடுக்கப்பட்ட பாரத பந்த்தை தொடர்ந்து, நாங்களும் கர்நாடக பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.” என்று ஹசிரு சேனா தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்