Aran Sei

மின் கட்டணம் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை – உடல் பாகங்களை விற்று கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கடிதம்

மின்சாரதுறையின் துன்புறுத்தல் காரணமாக, மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியாததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையின் தந்தையான முனேந்திரா ராஜ்புட், தற்கொலைக்கு முன் பிரதமர் நநேரந்தி மோடிக்கு எழுதியுள்ளதாக கூறப்படும் ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த கடிதத்தில், தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் விற்று, அதில் வரும் பணத்தில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் முனேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

முனேந்திரா, 87,000 ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்திருந்ததாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவருடைய குடும்பத்தார் என்டிடிவி – யிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த நேரத்தில் அவர் கட்டணத்தை செலுத்தாததால், முனேந்திராவின் அரவை மில் மற்றும் இருசக்கர வாகனத்தை மின்சார வாரியம் எடுத்துக்கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தமுறை, முனேந்திராவுக்கு விளைச்சல் இல்லாத காரணத்தாலேயே, அவரால் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் என்டிடிவி – யிடம் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்