Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் நேற்று (29-12-20) விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய கோரியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாயி போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக, தஞ்சையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணிக்குக் காவல்துறை அனுமதி வழங்காததால் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பேரணியாக தஞ்சை திலகர் திடலிலுக்குச் சென்றனர்.

’விவசாயி மகனின் அரசு போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுகிறது’ – இரா.முத்தரசன் கண்டனம்

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், மக்கள் அதிகாரம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்

முன்னதாக, டெல்லி போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சண்முகம், மத்திய மாநில அரசுகள் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார், போராடுவதற்கு அடிப்படை உரிமை இருப்பதாகவும், சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார்.

இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காவல்துறையின் எல்லா தடைகளையும் மீறி இந்தப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் போராட்டம் முடியும் வரை தமிழகத்திலும் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகள் அரசுடன் மேற்கொண்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் ”டெல்லியை போல் சென்னையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக” தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்