Aran Sei

விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் – பிரியங்கா சோப்ரா

credits : indian express

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த 12 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சான் பிரான்சிஸ்கோ, லண்டன், டொரான்டோ, மெல்பர்ன் மற்றும் பிற வெளிநாட்டு நகரங்களிலும்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு

”நமது விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களைத் தீர்த்து. அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 12 நாட்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் இன்று சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கு நான் வந்துள்ளேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஒரு சில விவசாயிகளிடம் பேசிய முதலமைச்சர் அவர்களுக்கான ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதா என்று அவர்களிடம் கேட்டு தெரிந்த்துக் கொண்டார்.

‘விவசாயிகள் நிலங்களை இழந்து, அழிந்து போவார்கள்’ – அகிலேஷ் யாதவ்

“விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானது. நாங்கள் தொடக்கத்தில் இருந்தே விவசாயிகளின் பக்கம் தான் இருக்கிறோம் எனவும் டெல்லிக்கு வந்து விவசாயிகளை தற்காலிக சிறைகளில் அடைத்து வைப்பதே திட்டம் ஆனால் நாங்கள் அதை அனுமதிக்கவில்லை”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

“விவசாயிகளை தற்காலிக சிறையில் அடைக்க கோரி என்னிடம் பலர் தொலைபேசி அழைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்தனர், ஆனால் நான் மறுத்துவிட்டேன். விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைப்பதே பலரின் திட்டமாக இருந்தது, ஆனால் நாங்கள் எங்கள் மனசாட்சியின்படி செயல்பட்டோம் ”என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்