Aran Sei

உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்

credits : the indian express

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப். ஹரியானா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலத்தில் பாஜக உறுப்பினர் ஒருவரால் நடத்தப்படும் உணவகம் (Hotel) ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை பாஜக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

இதையடுத்து, பாரதிய விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் கிர்பால் சிங் முசாபுர் தலைமையில் விவசாயிகள், உணவகத்தில் இருக்கும் பாஜக தொண்டர்கள் வெளியே செல்ல இயலாதபடி சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சோம் பிரகாஷிற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியுதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தினால் பாஜகவின் மாவட்ட மகளிர் அணியின் தலைவர் உட்பட பல பாஜக உறுப்பினர்கள் உணவகத்தின் உள்ளே செல்ல முடியாமல் வெளியிலேயே நின்றுள்ளனர்.

‘நாங்கள் உங்களின் அரசியல் எதிரியல்ல; துன்பத்தில் உள்ள நாட்டு மக்கள்’ – போராடும் விவசாயிகள்

இதையடுத்து, உணவகத்தில் உள்ளே இருந்த பாஜக தொண்டர்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து வெளியில் வர அஞ்சி, காவல்துறை உதவியுடன் பின் கதவு வழியாக வெளியே தப்பித்துச் சென்றுள்ளனர். முன்னாள் மேயர் அருண் கோஷ்லா, பாஜக மாவட்ட செயலாளர் ராகேஷ் டுக்கல் உட்பட பல தலைவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள பின் கதவு வழியாக வெளியேச் சென்றுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் தின போஸ்டர் – எதிர்ப்பு வலுத்ததால் திரும்பப் பெற்ற பாஜக

உணவகத்தின் வெளியே பாரதிய கிசான் சங்கத்தின் கொடி கம்பத்தை விவசாயிகள் நாட்டியுள்ளனர். கொடி கம்பத்தை அகற்றினோலோ அல்லது பாஜக தொடர்பான விழாக்கள் உணவகத்தில் நடத்தப்பட்டாலோ மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று உணவகத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

பாஜக தலைவர்கள் விவசாயிகளுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், சதி திட்டங்களை தீட்டி வருவதாகவும் பாரதிய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் முசாபுர் குற்றம்சாட்டியுள்ளார் என என்டிடிவி பதிவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்