Aran Sei

‘ஹோலி பண்டிகை அன்று கொளுத்தப்படும் விவசாய சட்ட நகல்’ : பாரத் பந்திற்கு ஆதரவு கோரும் விவசாயிகள்

Image Credit : thewire.in

விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், பல்வேறு வெகுஜன அமைப்புகளை சந்தித்து, மார்ச் 26 அன்று நடக்கவுள்ள நாடு தழுவிய பாரத் பந்திற்கு ஆதரவு கோரி, அவர்களுடன் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா கலந்தாலோசித்துள்ளது.

நேற்று (மார்ச் 17), செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்கநகர் கிசான் சமிதியைச் சேர்ந்த ரஞ்சித் ராஜு, விவசாயிகளின் போராட்டம் நான்கு மாதங்களை எட்டியதை குறிக்கும் வகையில், மார்ச் 26 ஆம் தேதி நடக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்ட  நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது, ​​ அனைத்து கடைகளும் பிற வணிக நிறுவனங்களும் 12 மணி நேரம் மூடப்படும் என்று கூறியுள்ளார்.

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடிக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் – உத்தர பிரதேச விவசாய தலைவர்

“மார்ச் 28 அன்று, மூன்று விவசாய சட்டங்களின் நகல்களை ஹோலி பண்டிகை தீயில் விவசாயிகள் எரிக்கப்பார்கள். இந்த வேலைநிறுத்தம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அனைத்து கடைகளும் பால்நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “சட்டங்களின் நகல்களை நாங்கள் எரிப்பதன் வழியாக அரசின் உணர்வுகளில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அதன் காரணமாக இச்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.” என்று ரஞ்சித்  ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்