Aran Sei

’பெல்லா சியாவோ’ போராட்டக்களத்தில் ஒலிக்கும் பாடல் – பாசிசத்திற்கு எதிரான கலகக்குரல்

ரே ஆண்டில், பெல்லா சியாவோவின் இரண்டு பாடல்கள் வெளியாக இந்நாடு வழிவகை செய்துள்ளது. பெல்லா சியாவோ என்பது ஒரு இத்தாலிய நாட்டுப்புற பாடல். இது நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் பாசிசத்திற்கு எதிராகவும் ஒரு ‘எதிர்ப்பு கீதமாக’ மாறியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பெல்லா சியாவோவின் இசையைத் தழுவிப் பாடல் வரிகளை நடைபெற்ற போராட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டனர். அவ்வாறு அமைக்கப்பட்ட பாடல் ‘வாபாஸ் ஜாவோ’ (திரும்பிப் போ) என்று பெயர் சூட்டப்பட்டது.

தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இப்போது, மீண்டும் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஒரு ‘வாபாஸ் ஜாவோ’ பாடல் உருவாகியுள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு இத்தாலியின் நெல் வயல்களில் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் பாடிய அசல் பாடலை நினைவுகூரும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் தொழிலாளர்களின் பாடல்தான் நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பின் போதும் ஒலிக்கப்பட்டது. இது உலகளவில் எதிர்ப்பின் அடையாளமாக மாறியது.

“பெல்லா சியாவோவின் வரலாற்றைப் பார்க்கும்போது, அதனை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது அர்த்தமுள்ளதாக இருந்தது” என்று இரண்டு இந்திய பாடல்களை உருவாக்கிய 27 வயதான பூஜன் சாஹில் தி டெலிகிராப்பிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலின் பஞ்சாபி மொழி பதிப்பு வெளியான பதினைந்தே நாட்களுக்குள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பூஜனின் பாடல் காணொளியாக உருவாக்கப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களைக் கொண்ட இந்தக் காணொளியை கார்வான்-இ-மொஹாபத் எனும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கான மக்கள் குழு தயாரித்துள்ளது.

அஹ்மத் ஃபைஸின் ‘ஹம் தேகெங்கே’ (Hum Dekhenge) பாடலும் பஞ்சாபி மற்றும் தமிழ் மொழி கலவையில் உருவாகியுள்ளது. இதுவும் விவசாயிகளின் போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஜஸ்டிஸ் ராக்ஸ் (Justice Rocks) என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த இளைஞர்களின் முன்முயற்சியால் இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. இதில் #Madrasis4Punjabis (பஞ்சாபிகளுக்காக மத்ராஸிகள்) எனும் ஹாஷ்டக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அதிர்வு வலுத்துள்ளது என்பதும் இது மொழியின் எல்லைகளை கடந்துள்ளது என்பதும் தெரிய வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்