மோடி அரசின் “விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை” மற்றும் “சர்வாதிகாரப்போக்கு” ஆகியவற்றை நாடுமுழுவதும் அம்பலப்படுத்த உள்ளதாகக் கிரந்திகர் விவசாய சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் இந்தப் போராட்டம், நிலம் மற்றும் மனசாட்சிக்கான போராட்டமென வெளிப்படுத்தவுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
ஹரியானா – ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள சன்ஹெரா பகுதியில் நடைபெற்ற கிசான் மஜ்தூர் பைச்சரா பஞ்சாயத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பரிதாபாத் காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்ட மற்றுமொரு இளைஞர் மரணமடைந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, இந்தக் கூட்டம் நடைபெற்றதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம்குறித்து தெரிவித்துள்ள ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தேசிய செயலாளர் யோகேந்திர யாதவ்,”பொதுவான தியாகத்தையும் பாரம்பரியத்தையும் உடைய வரலாற்று சிறப்பு கொண்ட மேவாட் மக்களின் ஒற்றுமையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சிதைக்க நினைக்கிறது” என்று கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளம் விவசாயத் தலைவர் அபிமன்யு கோஹர், 2013 ஆம் ஆண்டு முஸாபர் நகர் கலவரத்தையும், 2014 மக்களவைத் தேர்தலில் பணம் கொடுப்பதையும் பாஜக ஒருங்கிணைத்தது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.