Aran Sei

‘எங்கள் போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்’ – போராடும் விவசாயிகள்

ங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடி வரும் விவசாயிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஜூன் 9), ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என்றும் ஆனால், அதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 9), செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள் சங்க தலைவர் சிவ்குமார் கக்கா, “எப்போதுமே எங்கள் கோரிக்கைகள் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதுதான். இவற்றை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இப்போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ள விவசாயிகள் போராட்டங்கள் – 2019 ஆம் ஆண்டு 10,281 விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் தற்கொலை

“உங்கள் கோரிக்கைகளை ஏற்க தயார் என்றால், இது குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் தயார்.  ஏற்கனவே, ஒன்றிய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தைகளில், விவசாய சட்டங்களின் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

“சட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து நாங்கள் சொல்வதை அரசு விரும்பவில்லை. நாங்கள் இப்போராட்டத்திற்காக 555 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தியாகம் செய்துள்ளோம். ஆனால், விவசாயத்துறை அமைச்சரின் அறிக்கையானது பொறுப்பற்ற முறையில் உள்ளது.” என்று விவசாயிகள் சங்க தலைவர் சிவ்குமார் கக்கா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்