Aran Sei

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

போராடும் விவசாயிகள் - Image Credit : India Today

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடும் விவசாயிகளிடையே வன்முறையைத் தூண்டி, அவர்களை கலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத், “ஜனவரி 22 ஆம் தேதிக்குப் பிறகு நாங்கள் மத்திய அரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இப்போது இந்தக் கொடிய விவசாயச் சட்டங்கள் குறித்து நம் முழு நாட்டையும் அறிந்து கொள்ளவைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறோம். நாடு முழுவதும் இந்தப் போராட்டமானது பரவி வருகிறது. மத்திய அரசு தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கட்டும்.” என்று குறிப்பிட்டுளார்.

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

மேலும், “இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. இதனால், மக்கள் சோர்வடைகிறார்கள். ஆனால், அமைதியைக் காக்க வேண்டும் என்று மக்களிடம் தொடர்ந்து கோரிவருகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநிலத் தலைவர் குர்ணம் சிங் சதுனி,  “ஹரியானா விவசாயிகளிடம் வன்முறையைத் தூண்ட பாஜக கடுமையாக முயற்சிக்கிறது. பாஜகவையும் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி தலைவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்களிடையே நிகழும் எந்தவொரு வன்முறையும் பாஜகவுக்கு உதவும்படியாக அமைந்துவிடும். ஏனென்றால், அது ஹரியானாவிற்குள்ளேயே விவசாயிகளை அடைத்து வைக்க அரசிற்கு உதவும். ஏற்கனவே, டெல்லி எல்லைகளிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறது. ஆகவே விவசாயிகளிடம் எங்கள் ஒரே வேண்டுகோள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான்.” என்று கூறியுள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்