Aran Sei

மோடிக்கு ரத்தத்தில் கடிதம் – சட்டங்களைத் திரும்பப் பெற விவசாயி கோரிக்கை

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பாரதிய விவசாய சங்கத்தின் (லோக் சக்தி) தலைவர் ஷியோராஜ் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரத்தத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஷியோராஜ் சிங் இக்கடிதத்தை எழுதியுள்ளார் என தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

நொய்டாவில் உள்ள தலித் பிரேர்ணா தளத்தில் (Dalit Prerna Sthal) டிசம்பர் 2-ம் தேதி முதல் ஷியோராஜ் சிங் போராடி வருகிறார். முன்னாள் பிரதமரும் விவசாயிகளின் தலைவருமான சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாள் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“விவசாய மசோதாவை திரும்பப் பெறுங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கச் சட்டத்தை உருவாக்குங்கள் மற்றும் ஒரு விவசாயிகள் ஆணையத்தை உருவாக்குங்கள் என்று அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய சுருக்கமான கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் தின போஸ்டர் – எதிர்ப்பு வலுத்ததால் திரும்பப் பெற்ற பாஜக

இந்தக் கடிதம் நொய்டா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லோக் சக்தி செய்தித் தொடர்பாளர் ஷைலேஷ்குமார் கிரி தெரிவித்துள்ளார். இது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

”ரத்தத்தில் எழுதப்பட்ட விவசாயிகள் சங்கத்திடமிருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது. விவசாயிகள் சங்கத்திடமிருந்து ரத்தத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று எனக்கு வந்துள்ளது. இந்தக் கடிதம் பிரதமரின் அதிகாரிக்கு எங்கள் மாவட்ட நீதிபதி மூலம் அனுப்பப்படும்” என்று நொய்டாவின் நீதிபதி உமா சங்கர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

‘தனியார் தலையீட்டை எதிர்க்கிறோம்’ – விவசாயிகள் சொல்வது சரியா? – அருண் கார்த்திக்

தலித் பிரேர்ணா தளத்தில் போராட்டம் நடைபெறும் பொது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் வரவில்லை என்று உமா சங்கர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்