Aran Sei

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

Image credit : indianexpress.com

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாஜகவிற்கு எதிராக மகா பஞ்சாயத்து நடத்தப்படும் என, பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்க்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கம் சென்றிருக்கும் அவர் இதைக் கூறியுள்ளார். முன்னதாக, ராகேஷ் திகாய்த்தை கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் வரவேற்றார். பின்னர் கொல்கத்தா மாயோ சாலையில் அக்கட்சியின் தலைவர்கள் அவரை சந்தித்தனர்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது என தெரிவித்த திகாய்த், தேவைப்பட்டால் பாஜகவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மேற்குவங்க மாநிலம் முழுவதும் பயணம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மக்களிடம் என்ன கூறுவீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகேஷ் திகாய்த், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பேன். இந்தக் கட்சி நாட்டை கொள்ளையடித்து விட்டது. இது வணிகர்களுக்கான கட்சி.” என கூறவிருப்பதாக திகாய்த் தெரிவித்தார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்