Aran Sei

‘தொற்று காலத்தில் விவசாய சட்டங்களை இயற்ற முடிந்த அரசால், அதே தொற்று காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது’ – ராகேஷ் திகாயத் கேள்வி

Image credit : indianexpress.com

கொரோனா தொற்றுநோய் காலத்தில் சட்டங்களை இயற்ற முடியுமானால், அத்தொற்றுநோய் காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது என்று பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கேள்வி எழுப்பியுள்ளார்

இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் செய்து வரும் போராட்டம் நேற்று (மே 26) ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றியும், பிரதமர் மோடியின் உருவ பொம்மைகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கறுப்புக் கொடி, கறுப்புத் தலைப்பாகை அணிந்த விவசாயிகள்: பிரதமரின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம்

இதுதொடர்பாக, காசியாபாத்தில் பேசிய ராகேஷ் திகாயத், “இந்த போராட்டம் நீண்ட காலத்திற்கு தொடரும். கொரோனா தொற்றுநோய் காலத்தில் சட்டங்களை இயற்ற முடியுமானால், அத்தொற்றுநோய் காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒன்றிய அரசு போராட்டத்தை நசுக்க முயல்கிறது. எதிர்காலத்திலும் இதைச் செய்யும். ஆனால், விவசாயிகள் டெல்லி எல்லைகளை விட்டு வெளியேறப் போவதில்லை. விவசாயிகள் வைப்பது ஒரே நிபந்தனைதான். மூன்று புதிய விவசாய சட்டங்களையும் ரத்து செய்து, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அறுவடை முடிந்து டெல்லிக்கு திரும்பும் பஞ்சாப் விவசாயிகள்: போராட்டம் வலுவடைவதாக விவசாயிகள் சங்கம் தகவல்

ஒருவேளை இப்போராட்டம் தோல்வியுற்றால், அரசு தான் விரும்பியதை செய்யும் என்றும் மாறாக போராட்டம் வெற்றிப்பெற்றால், எதிர்கால தலைமுறை விவசாயிகளுக்கு இவ்வெற்றியின் பலன் கிடைக்கும் என்றும் ராகேஷ் திகாயத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்