ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் இருந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஹரியானாவில் இருந்து எண்ணற்ற விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் இன்னும் சில நாட்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் வாகனங்களில் கருப்புக் கொடிக்கட்டிக் கொண்டு கர்னல், பானிபட் வழியாக டெல்லி சிங்கு எல்லையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுள்ளதாக பாரத் கிஷன் விவசாய சங்கத்தின் (சருனி)தலைவர் குர்ணம் சிங் சருனி தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த விவசாய சங்கத்தின் செய்தி தொடர்பாளர்,”3500 வாகனங்களில் விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு சென்றுள்ளனர், அடுத்த கட்டமாக வரும் ஜூன் 10 அன்று இன்னொரு திரளான விவசாயிகள் இணைய உள்ளனர்” என்று அந்த செய்தியில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்யுக்த கிஷன் மோர்ச்சா விவசாய சங்கம்,”மருத்துவர்கள் போராட்டக்களத்தில் விவசாயிகள் எண்ணிக்கை குறைவது போன்ற தோற்றத்தை பாஜக உருவாக்கிறது. ஆனால், அரசு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் எண்ணற்ற விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் இணைந்து வருவதே இதற்கு எதிராக உள்ளது என்பதை அறிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானா பாடேஹபத்தில் உள்ள காவல் நிலையத்தின் முன் விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளையும், விவசாயிகளையும் விடுவிக்க வேண்டுமென வரும் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.