Aran Sei

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

டந்த ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டத்தை கலைத்தது போன்று விவசாயிகளின் போராட்டத்தை கலைத்து விட மத்திய அரசு நினைக்க வேண்டாம் என்று பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னரே போராட்டக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதியன்று, டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

விவசாயிகள் போராட்டம்: `ஷாஹீன் பாக் பாட்டி கைது’

நேற்று (ஏப்ரல் 7), செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், “விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள். மத்திய அரசு கொரோனா தொற்று பரவலை கூறி அச்சமூட்டுகிறது. ஷாஹீன் பாக்கில் போராட்டத்தைக் கலைத்தது போல, விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் என்று மத்திய அரசிடம் எச்சரித்துள்ளோம். இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வராது. நாங்கள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.” என்று உறுதிபட கூறியுள்ளார்.

மேலும், 2023-ம் ஆண்டு வரை போராட்டத்தைத் தொடர வேண்டியிருந்தாலும், நாங்கள் அதற்கும் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்