Aran Sei

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – எதிர்கட்சிகள் ஒன்றிணைய சிபிஎம் கோரிக்கை

credits : the newindian express

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் தீர்மானத்தை கொண்டு வரும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு, அகாலி தளம், சிவசேனா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்ற அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள்

“இந்த கட்சிகள் அனைத்தும், விவசாய சட்டங்களை எதிர்ப்பதால், மேலவையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருக்காது” என்று தெரிவித்துள்ள யெச்சூரி “உண்மையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்த சட்டங்கள் முறைகேடாகவே நிறைவேற்றப்பட்டன” என்றும் கூறியுள்ளார்.

டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடந்திருந்தால், பாஜக அரசால் இந்த சட்டங்களை மாநிலங்கள் அவையில் நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறியுள்ள யெச்சூரி, எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே, குரல் வாக்கெடுப்பின் மூலம், குறுக்கு வழியில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“டெல்லி தெருக்களில் இரத்தம் சிந்துவதை தடுக்கும் பொறுப்பு மோடிக்கு உள்ளது” – பிரேம் சங்கர் ஜா

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தினந்தோறும் 1 லட்சம் பேர் கொரேனாவல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயம், வேளாண் சட்டங்களை அவசரமாக நிறைவேற்றவே மத்திய அரசு நாடாளுமன்றத்தை கூட்டியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றை குரலில் விசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள பிருந்தா காரத், இது நாடாளுமன்றத்திற்குள்ளும் ஒலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்