Aran Sei

விவசாய சட்டங்கள்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதங்களின்றி திரும்பப்பெறப்பட்டது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எந்தவிதமான விவாதமும் இன்றி மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, அம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு, விவாதமின்றி அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று(நவம்பர் 29), மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்

இன்று(நவம்பர் 29), தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பப்படும் பிரச்னைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க, நேற்று முன்தினம்(நவம்பர் 27),  கூட்டப்பட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று(நவம்பர் 29), ‘மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021′-ஐ மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநிலங்களவையில் முன்வைக்க வாய்ப்புள்ளது.

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021-ஆனது நேற்று முன்தினம்(நவம்பர் 27) மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

நவம்பர் 19 ஆம் தேதி, மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

அச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையாக ரத்து செய்யும் வரை விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்