Aran Sei

‘ ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரமிது ’ – கைகோர்க்கும் விவசாய சங்கங்களும் தொழிற்சங்கங்களும்

ங்கள் கோரிக்கைகளை மக்களிடையே பரப்புரை செய்யவும், சில திட்டங்களை முன்னெடுக்கவும் 10 மத்திய தொழிற்சங்கங்களும், ம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கீழ் திரண்டுள்ள விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்துள்ளன.

நேற்று (மார்ச் 1) மாலை, இரு தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்று (மார்ச் 2) நடைபெறவுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவிற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து பரப்புரை செய்வது குறித்தும் இப்பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் இது போன்ற திட்டங்களை சில உறுப்பினர்கள் ஏற்கனவே வகுத்துள்ளனர் என்றாலும், மற்றவர்களுக்கு இத்திட்டத்தின் மீது போதுமான ஆர்வம் இல்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.

” புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு ஆலோசனை ஒரு கேலிக்கூத்து ” – 10 மைய தொழிற்சங்கங்கள் கண்டனம்

“விவசாயிகள் சங்கங்களின் தரப்பில் விவசாய சட்டங்களையும் மின்சார மசோதாவையும் திரும்ப பெறுவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பூர்வ உத்தரவாதத்தை அளிப்பது ஆகிய மூன்று கோரிக்கைகளும், தொழிற்சங்கங்களின் தரப்பில் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுவதோடு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இருதரப்பும் அடங்கிய ஒரு கூட்டு இயக்கத்தை முன்னெடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய கிசான் சபையின் பொருளாளர் கிருஷ்ணபிரசாத் கூறியுள்ளார்.

மேலும், “இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாய சட்டங்களை எதிர்த்து மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மத்திய அரசு வகுத்திருக்கும் ஒரு பரந்துபட்ட திட்டத்தில், விவசாய சட்டங்கள் ஒரு பகுதி மட்டுமே என்ற உண்மையை புரிந்து கொண்டனர். ஆகவே, நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரமிது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

“விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூட்டறிக்கை குறித்தும் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்தும், இன்று (மார்ச் 2) விவசாயிகளின் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும். மார்ச் 15-ம் தேதியை தனியார்மயமாக்கலுக்கு எதிரான தினமாக கடைப்பிடிக்கவேண்டும் என்பது உட்பட சில திட்டங்களை தொழிற்சங்கங்கள் பரிந்துரைத்திருக்கின்றன. மேலும், மார்ச் 23-ம் தேதி, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியவர்களின் தியாக நாளாக அனுசரிக்கப்படும்.” என்று அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி தெரிவித்துள்ளது.

மேலும், “இது ஒரு சுமூகமான சந்திப்பு. விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அளித்த ஆதரவுக்கு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. அவர்களின் போராட்டத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோம். தற்போதைய ஆட்சியில் ஒடுக்குமுறைகளை எதிர்த்து, ஒன்றிணைந்து போராட, விவசாயிகளின் இந்த போராட்டம் அனைத்து சக்திகளுக்கும் மக்களுக்கும், பெரும் உந்து சக்தியாக இருந்து வருகிறது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்