Aran Sei

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

credits : reuters

விவசாயிகள் போராட்டத்திற்கு, பிரபல பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ரிஹான்னா மதம்குறித்த தேடல் இந்தியர்களால் கூகுளில் ட்ரெண்ட் ஆகி இருப்பதாக நியூஸ் 18 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குடியர தினத்தில் டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் பரவாமல் தடுக்கும் விதமாக, டெல்லியின் சில பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ரிஹான்னா, விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசவில்லையெனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ட்விட்டை அவர் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில், ரிஹான்னா யார் என்பது தொடர்பாகத் தேடல்கள் கூகுள் இணையத்திளத்தில் டிரெண்ட் ஆகத் தொடங்கியதாக நியூஸ் 18 தெரிவித்துள்ளது.

 

ரிஹான்னாவின் ட்வீட் குறித்து, ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இடையே கருத்து மோதல் நடைபெற்றது. ரிஹான்னாவின் ட்வீட் விவசாயிகள் போராட்டத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளதாக பலரும் ட்வீட் செய்தனர். ஆனால் சிலர், பணம் பெற்றுக்கொண்டு ரிஹான்னா ட்வீட் செய்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

இந்நிலையில், ரிஹான்னா தொடர்பாகக் கூகுள் இணையதளத்தில் நடைபெற்ற தேடுதல்களில், “ரிஹானா இஸ்லாமியரா?”, “ரிஹானாவின் மதம் என்ன?” ஆகிய கேள்விகள் முதன்மையானதாகவும், மற்ற தேடல்களில் அவரது பாடல்கள் மற்றும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை குறித்ததாக இருந்ததாகவும் நியூஸ் 18 தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்