Aran Sei

லக்கிம்பூர் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் – சம்பத்தை படம்பிடித்ததே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

க்கிம்பூர் கேரி கலவரத்தைப் படம்பிடித்தாக ஊடகவியலாளர் ராமன் கஷ்யப் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சருமான அஜய் மிஸ்ரா மற்றும் உத்திரபிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவிற்கு எதிராக விவசாயிகள் போராடி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த பகுதிக்கு ’சத்னா’ செய்தி தொலைக்காட்சியின் பத்திரிக்கையாளரான ராமன் கஷ்யப் சென்றுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை – விவசாயிகளை மோதிய காரை ஓட்டிச் சென்றது பாஜக அமைச்சரின் மகன் என்பது காணொளியில் அமபலம்

ஒன்றிய இணையமைச்சரின் தந்தை நினைவு நாள் நிகழ்விற்கு செல்லும்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் உள்ளிட்ட மூன்று வாகனங்கள் விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

லக்கிம்பூர் கலவரத்தில் பத்திரிகையாளர் ராமன் கஷ்யப் உயிரிழந்திருப்பதாகவும் உடலை அடையாளம் காண வருமாறு அவரது தந்தை ராம் துலாரேவிற்கு காவல்துறையினரிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்ஸின் கைப்பாவையாக செயல்படுகிறார்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

ராமன் கஷ்யப்பின் சகோதரர் பவான், ”ராமன் கஷ்யப் மரணம் தொடர்பாக நிகாஷன் மற்றும் துகினியா காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமன் கஷ்யப்பின் மரணத்திற்கு அமைச்சரின் மகன் ஆஷிஷ் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.

”விவசாயிகள்மீது கார் ஏற்றியதை படமாக்கியபிறகு, ராமன் மீது துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்டக் காணொளிகளை கண்டேன் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக ராமன் கஷ்யப்பின் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியாவை தனியாருக்கு விற்கிறார் பிரதமர் மோடி’ – பாஜக சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்

நிலைமையை சமாளிக்க காவல்துறையினர் தயாராக இல்லை. போராட்டத்தின்போது பெரிய அளவில் கலவரம் ஏற்படும் என எனது நண்பன் தெரிவித்தான். சாமானியர்களாலேயே நிலைமையை உணரும்போது காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இல்லாதத்து ஏன்?” என ராமனின் நண்பர் உமேஷ் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

மஸ்குலர் டிஸ்றாபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் – மருத்துவ உதவி வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை

நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தினர் அனைவரும் பாஜகவிற்கு மட்டுமே வாக்களித்து வருவதாக தெரிவித்த ராமனின் தந்தை ராம் துலாரே, “ராமன் கஷ்யப் உயிரிழந்ததற்கு ரூ 50 லட்சம் இழப்பீடு மற்றும் ராமனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்