Aran Sei

ரேஷன் அட்டை இல்லாததால் இருமாதம் பட்டினியால் வாடிய குடும்பம் – துயர் துடைத்த தன்னார்வலர்கள்

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை இல்லாததால் கொரோனா காலத்தில் அரசால் வழங்கப்பெறும் உதவி கிடைக்கப்பெறாமல் இரண்டு மாதமாக பட்டினியாக இருந்த தாய் மற்றும் அவரது 5 குழந்தைகளை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த 45 வயதான குட்டி தேவி, கொரோனா தொற்றுப் பரவலின் முதல் அலையில் கணவரை இழந்துள்ளார். குட்டி தேவிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 20 வயது நிரம்பிய மூத்த மகன் மட்டும் குடும்பப்பொறுப்பை ஏற்று வேலை வேலை செய்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாததாலும், மீண்டும் உச்சமடைந்த கொரோனா இரண்டாம் அலை பரவலாலும் வேலை இழந்ததால் அவரது குடும்பம் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளது.

சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம் –  20 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் சென்ரல் பேங்க் தகவல்

கடந்த 2 மாதமாக குட்டி தேவியும் அவரது 5 குழந்தைகளும் பட்டினியாக இருந்துள்ளனர். அவர்களைப் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு சென்று மிகவும் மோசமான நிலையில் இருந்த அனைவரையும் மீட்டு உடனடியாக அலிகர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு குளுகோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை அவசரப் பிரிவில் உள்ள மருத்துவர் அமித் கூறும்போது, ‘‘குட்டி உட்பட 6 பேரும் மிகவும் நலிவுற்றுள்ளனர். அவர்களால் நடக்க கூட முடியவில்லை. தற்போது அனை வருக்கும் கஞ்சி மற்றும் சத்துள்ள உணவுகள் வழங்கி வருகிறோம். தற்போது அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்றார்.

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

”கடந்த 3 மாதமாகவே வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. பட்டினியும் நோயும் எங்களை மிகவும் பாதித்து விட்டது. பக்கத்து வீட்டார் சிலகாலம் உதவினர். கிராமத் தலைவரிடம் சென்று உதவி கேட்டோம். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். ரேஷன் கடைக்காரரிடம் சென்று 5 கிலோ அரிசியாவது கொடுங்கள் என்று கேட்டோம். அவரும் தர மறுத்துவிட்டார். நாங்கள் எங்கு போவோம்?.” என்று குட்டிதேவி கூறியுள்ளார்.

குட்டிதேவி 38 கிலோவாகவும், மூத்த மகன் 40 கிலோவாகவும் மற்ற குழந்தைகள் 15 முதல் 30 கிலோ வரை உடை எடை உள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் வழியே அறிய வருவதாக ஸ்காரால் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

அலிகர் மாவட்ட ஆட்சியர் சந்திர பூஷண் சிங் கூறும்போது, ‘‘குட்டி குடும்பத்தினரிடம் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எதுவும் இல்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு அட்டைகளையும் பெறுவதற்கு குட்டி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனினும், உதவி செய்யாத கிராம தலைவர், ரேஷன் கடைக்காரரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். தற்போது, குட்டி குடும்பத்தினருக்கு ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அந்தி யோதயா அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளதாக எண்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

ரேஷன் அட்டையையும் ஆதார் அட்டையையும்  பெற ஏன் முயற்சிக்கவில்லை என்று குட்டிதேவியிடம் கேட்டபோது, ‘‘ரேஷன் அட்டை, ஆதார் அட்டை பெறுவதற்கு உள்ளூர் ஏஜென்ட்டிடம் சென்றேன். அதற்காக 350 ரூபாயும் கொடுத்தேன். ஆனால், என்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதால் மேற் கொண்டு உதவ முடியாது என்று ஏஜென்ட் கூறிவிட்டார். ஆதார் அட்டை பெறுவதற்கு செல்போன் எண் முக்கியம் என்று அவர் கூறினார். அதனால் 2 அட்டைகளையும் பெற முடியவில்லை’’ என்று குட்டி தேவி கூறியதாக எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

 

Source: scroll.in, NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்