Aran Sei

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை இந்திய தூதரகம் தொடர்பு கொள்ளவில்லை -இறந்தவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

க்ரைனின் கார்கிவ் நகரில் கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டுள்ள செய்தியை நேற்று (மார்ச் 1) ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது.
இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரத்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று நவீனின் தந்தை சேகர் கவுடா குற்றம் சாட்டியுள்ளனர்.
கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த நவீன், உணவு வாங்கவும், அதற்கான பணத்தை எடுக்கவும் பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த போதுதான் கொல்லப்பட்டதாக அவரது மாமா உஜ்ஜனகவுடா தெரிவித்துள்ளார்.
நவீன் கொல்லப்படுவதற்கு முன்பு, தனது தந்தைக்கு அழைத்து பேசிய பொழுது, “என்னுடைய ​​பதுங்கு குழியில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை” என்று நவீன் கூறியுள்ளதாக அவரது மாமா உஜ்ஜனகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரணமடைந்த நவீனின் தந்தை சேகர் கவுடாவை அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். நவீனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
நவீனின் மரணம் கார்கிவ் நகரில் மருத்துவம் படித்து வரும் பிற இந்திய மாணவர்களின் குடும்பத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகனான பிரவீன் கார்கிவ் நகரில் மருத்துவம் படித்து வருகிறார். தன் மகனின் நிலை குறித்து ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “என் மகனும் மற்றவர்களும் ஒரு பதுங்கு குழியில் இருக்கிறார்கள். ‘எங்களை இங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்தால் நாங்கள் உயிர் பிழைப்போம், இல்லையேல் அனைவரும் இறந்து விடுவோம்’ என அவர்கள் கூறி வருகின்றனர். ஆகவே இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறும் வரை போரை நிறுத்துமாறு,  உக்ரைன், ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடமும் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும்” என்று ஸ்ரீநிவாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
Source : TheWire
 
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்