Aran Sei

ரோஹிங்கியா பெண்மணியை மியான்மருக்கு திருப்பி அனுப்ப தடை – மனித உரிமை ஆணையம் அறிவிப்பு

Credit : The Wire

மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாவைச் சேர்ந்த பெண்மணியை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என மணிப்பூர் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆவணமற்ற புலம்பெயர்ந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்களை முகாம்களில் அடைத்து வைக்கவும், பின்னர் அவர்களை மியான்மருக்கு நாடு கடத்தவும் இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்தியாவில் 16 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி: அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள்

மியான்மர் ராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க படகுகளிலோ அல்லது நடந்தோ நாட்டை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறத் தொடங்கினர். இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு இனப்படுகொலை நோக்கத்துடன் நடத்தப்பட்டன என்று ஐ.நா சபை குற்றம்சாட்டியுள்ளது.

ஹஷினா பேகம் என்ற பெண்மணி மணிப்பூரின் மோரே நகரிலிருந்து மியான்மருக்கு இந்திய அரசின் நடவடிக்கைக்கு மணிப்பூர் மாநில மனித உரிமை ஆணையம் தடைவிதித்துள்ளது.

மகாராஷ்டிரா: பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்க வலியுறுத்திய பாஜக எம்எல்ஏ

இந்த நடவடிக்கை இந்திய அரசியலைமப்பில் வழங்கப்பட்டுள்ள வாழ்தலுக்கான உரிமைக்கு எதிராக உள்ளது என ஆனையம் தெரிவித்துள்ளது.

இம்பாலைச் சேர்ந்த தன்னார்வல அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் ஆணையம் இந்த தடையை விதித்துள்ளது.

ஹஷினா பேகத்தின் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளும் ஜம்முவின் கத்துவா துணை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Source: The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்