Aran Sei

இஸ்லாமியர் கடைகளில் மட்டுதான் இஸ்லாமியர்கள் பொருள் வாங்க வேண்டும் என்கிற பொய் பிரச்சாரம் – வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடிக்க ஜமியத் உலமா-ஐ-ஹிந் கோரிக்கை

மலான் மாதத்தில், இஸ்லாமியர் அல்லாத கடைகளில் இஸ்லாமியர்கள் பொருள் வாங்க கூடாது என்று பரப்பப்படும் பொய் செய்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று ஜமியத் உலமா-ஐ-ஹிந் என்ற இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்பது 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பாகும். அந்த அமைப்பு மார்ச் 26 ஆம் தேதியிட்ட இந்த அறிக்கை மார்ச் 31 அன்று பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் என்பவரால் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் மட்டுமே இஸ்லாமியர்கள் பொருள் வாங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. இது நிச்சயமாக இஸ்லாமியர்களின் உணர்வைப் பிரதிபலிப்பது அல்ல. மேலும் இந்த அறிவிப்பு எந்த இஸ்லாமிய அமைப்பாலும், மத தலைவரால் வெளியிடப்படவில்லை.

ஏந்தவொரு இஸ்லாமியரும் இத்தகைய செயலை செய்யவோ, ஊக்குவிக்கவோ கூடாது. இத்தகைய பிரச்சாரம் இஸ்லாமியச் சமூகத்திடம் இருந்து எழுந்திருக்க வாய்ப்பில்லை. இது சமூக ஊடகங்களில் தன்னை இஸ்லாமியராகக் காட்டிக்கொள்ளும் இந்துத்துவாவினரின் செயலாகத்தான் இருக்கும். அந்த வகையில் இது மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்துத்துவாவினரின் செயல்திட்டமாகும்.

இஸ்லாமியர்கள் அனைத்து மதத்தினரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நட்புறவு பேண வேண்டும். பொறுப்பான குடிமக்களாகிய நாம் எந்தவொரு செய்தியை பகிரும் முன்பும், அதன் உண்மைத் தன்மைகளை ஆராய வேண்டும். வெறுப்பை விதைக்கும் பொய்யான செய்திகளை நாம் பகிரக் கூடாது.

வெறுப்பை விதைக்கும் இத்தகைய வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடிக்கவும், அனைத்து மதத்தினரை மதிக்கவும் நாங்கள் இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்று ஜமியத் உலமா-ஐ-ஹிந் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்