Aran Sei

போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்த உ.பி பாஜக எம்எல்ஏ: 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

ல்லூரியில் சேர்க்கையில் போலி மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்திய வழக்கில் உத்தரபிரதேச மாநில பாஜக சட்டபேரவை உறுப்பினர் இந்திர பிரதாப் திவாரிக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறப்பு நீதிபதி பூஜா சிங் தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனையடுத்து, எம்.பி/எம்.எல்.ஏக்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜரான இந்திர பிரதாப் திவாரியை காவலில் எடுத்துள்ள காவல்துறை, பின்னர் அவரை சிறையில் அடைத்துள்ளது.

மேலும், நீதிமன்றம் அவருக்கு ரூ.8,000 அபராதமும் விதித்துள்ளது.

கபூ திவாரி என்ற இந்திர பிரதாப் திவாரி, அயோத்தியில் உள்ள கோசைகஞ்ச் சட்டபேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

28 ஆண்டுகளுக்கு முன்பு, 1992 ஆம் ஆண்டு, இந்திர பிரதாப் திவாரிக்கு எதிராக அயோத்தியில் உள்ள சாகேத் டிகிரி கல்லூரியின் முதல்வர் யாகுவன்ஷ் ராம் திரிபாதி என்பவர் ராம ஜன்மபூமி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, 1990 ஆம் ஆண்டு, பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் தோல்வியடைந்த இந்திர பிரதாப் திவாரி, போலி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து அடுத்த ஆண்டிற்கான சேர்க்கையைப் பெற்றிருக்கிறார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை காலத்தில், இவ்வழக்கை தொடுத்த  கல்லூரி முதல்வர் யாகுவன்ஷ் ராம் திரிபாதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, சாகேத் கல்லூரியின் அப்போதைய டீன்னான மகேந்திர குமார் அகர்வால் மற்றும் பிற சாட்சிகள் இந்திர பிரதாப் திவாரிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்