கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி கொள்வவதற்கு பதிவு செய்வது குறித்து ஹேக்கர்களால் குறுஞ்செய்தி வழியாக போலியான செயலி பரப்பட்டு தகவல் திருடப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும், அதில் குறிப்பிடப்படும் செயலியை அலைபேசியில் இயக்கினால் அப்போது அலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SMS worm impersonates Covid-19 vaccine free registration
Android SMS worm tries to spread via text messages as fake free registration for Covid-19 vaccine – targets India 🇮🇳
It can spread itself via SMS to victim contacts with link to download this malware. https://t.co/EXAAGARqOP pic.twitter.com/HX957bPVu5— Lukas Stefanko (@LukasStefanko) April 29, 2021
மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள இணைய பாதுகாப்பு ஆய்வாளர் லுகாஸ் ஸ்டென்பான்கோ,”18+ வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பதிவு, கோவிட்-19 செயலி இணைய முகவரி என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும், அந்தச் செயலியை இயக்கினால் அலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Android SMS Worm was updated an hour ago.
It received a light mode and app name was changed pic.twitter.com/ZPUmIVdxrm— Lukas Stefanko (@LukasStefanko) April 29, 2021
மேலும், தற்போது அந்தச் செயலி தடுப்புமருந்து பதிவு (Vaccine Register) என்று பெயர்மாற்றம் செய்து பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.