Aran Sei

“இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்” – அலுவலகம் கூட இல்லை என்பது ஆய்வில் அம்பலம்

ந்தியாவில் 36 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம் அளித்த நிறுவனத்திற்கு சொந்தமாக அலுவலக கட்டடம் கூட இல்லை என பிபிசி புலனாய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை (மே 24)  தி எக்னாமிக் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்களின் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. இந்தியாவில் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு சுமார் 36 லட்சம் கோடி) முதலீடு செய்ய விரும்புவதாக ஒரு நிறுவனத்தின் பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமனம் – மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

கடந்த ஆண்டும் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அமெரிக்க முதலீடுகளின் மதிப்பே 700 மோடி அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மதிப்பு மொத்த அமெரிக்க முதலீட்டின் மதிப்பைவிட 71 மடங்கு அதிகம்.

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் வெளியாகி இருக்கும் விளம்பரத்தில், அந்த நிறுவனத்தின் பெயர் லாண்டோமாஸ் வென்சர்ஸ், அந்தக் குழுமத்தின் தலைவர் பிரதீப் குமார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிக்பெரிய ஒரு தொகையை முதலீடு செய்ய இருப்பதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது அசாதரணமாக தோன்றியதை அடுத்து, இதுகுறித்த புலனாய்வில் பிபிசி மேற்கொண்டது.

செங்கல்பட்டு கொரோனா தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

நிறுவனத்தின் இணையதளமாக https://landomus.com/ இணையதளத்திற்கு சென்று பார்த்த போதே ஒரே ஒரு பக்கம் மட்டுமே இருந்துள்ளது. அதில் விளம்பரத்தில் என்ன கொடுக்கப்பட்டிருந்ததோ, அந்தத் தகவல் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

வழக்கமாக நிறுவனம் விவரம் (முகவரி, கிளைகள், செயல்பாடுகள்) தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் ஒரு பக்கம் இந்த இணையதளத்தில் இல்லை.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரம்மாண்ட கட்டிடங்களை முகப்பு பக்கங்களாக கொண்ட அந்த இணையதளத்தில், நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் 10 பேர்களின் பெயர் மற்றும் புகைக்படம் மட்டுமே உள்ளது. அவர்கள்குறித்த பிற விவரங்கள் இல்லை.

நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் இயக்குநர் பிரதீப் குமார் சத்யபிரகாஷ் மற்றும் இயக்குநர் மம்தா என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு முகவரி, அந்த நிறுவனத்தின் முகவரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நிறுவனத்தின் தொலைபேசி என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

நிறுவனம் செயல்படுத்திய திட்டங்கள், தொலைநோக்கு ஆகியவை இணையதளத்தில் இடம்பெறாததை சந்தேகத்தை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் முகவரி இடம்பெற்றிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்குக் குடியிருப்புகள் மட்டுமே இருந்தன.

மேலும், அங்கு இந்த நிறுவனம் மட்டுமல்ல எந்த நிறுவனத்தின் அலுவலகமும் இல்லை. இது தொடர்பாக அங்கு விசாரித்தபோது, அங்கு இதுவரை எந்த நிறுவனமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டும் என தெரிவித்த நிறுவனத்திற்கு எந்த முகவரியும் இல்லை. இதனை அடுத்து அந்த முகவரிக்கு மின்னஞ்சல்மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு நிறுவனத்தின் தலைவரின் சார்பில் சுருக்கமாக பதிலளிக்கப்பட்டது.

அதில்,”இந்திய ஒன்றிய அரசுக்கு எங்களைப் பற்றித் தகவல்களை அனுப்புயுள்ளோம், பதிலுக்கு காத்திருக்கிறோம். பதில் கிடைத்தவுடன் அனைத்து விவரங்களையும் உங்களுக்கு அனுப்புகிறோம். பொதுவெளியிலும் வெளியிடுகிறோம்” என தெரிவித்திருந்தார்.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

நிறுவனத்தின் முகவரி தொடர்பான கேள்விக்கு அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

நாளிதழில் வெளியான விளம்பரம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் நிறுவனம்குறித்து மேலும் ஆய்வு செய்தபோது நிறுவனத்தின் இணையதளம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெங்களூரூவில் யூனைட்டட் லேண்ட் பேங்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

லாண்டோமஸ் ரியாலிட்டி வென்சர்ஸ் என்ற பெயரில், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலதனம் 1 லட்ச ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் கடைசி ஆய்வுக்குழு கூட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்று இருப்பதாக கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 31, 2018 ஆம் தேதிக்கு பிறகு நிறுவனத்தின் வரவு செலவு கணக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் முகவரிக்கு சென்று பார்த்தபோது, அங்கு வேறொரு நிறுவனம் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதன்மூலம் நிறுவனத்தின் அலுவலகம் என்று ஒன்று இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

நிறுவனத்தின் ஆலோசகர்கள் பட்டியலில் ஒரு வெளிநாட்டு பெண்மணியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவரைப் பற்றி லிங்கட் இன் தளத்தின் தேடியபோது பெயருக்கும், புகைப்படத்திற்கு நிகரான பாம் கியோ என்ற ஒருவரின் விவரம் கிடைத்தது.

இது தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

மற்றவர்களின் பெயரிலும் லிங்கட் இன்னில் கணக்குகள் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

Source : BBC Tamil

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்