Aran Sei

நடக்கவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் : வெறுப்பு பிரச்சாரத்தையும் போலிச் செய்திகளையும் கட்டுப்படுத்துமா ஃபேஸ்புக்?

Image Credits: The Economic Times

மிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பரப்பபடும் வெறுப்பு பிரச்சாரத்தையும், வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 29 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் நிறுவனம். அதனுடைய தளத்தில் பரப்பபடும் வெறுப்பு பிரச்சாரத்தை செயற்கை நுண்ணறிவு பொருந்திய தொழிற்நுட்பத்தை கொண்டு அடையாளம் கண்டு, அந்நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் பட்சத்தில் நீக்கப் போவதாக அறிக்கையில் கூறியுள்ளது.

சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்

இந்தத் தொழிற்நுட்பத்தை கொண்டு, அருவருப்பான பேச்சுகள், அதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்  மற்றும் சொற்றொடர்களையும் அடையாளம் காண இருக்கிறோம் எனவும் இது போன்ற வார்த்தைகளைக் கொண்ட பதிவுகள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்படும் அல்லது அந்தப் பதிவு அதிகமாக பகிரப்படுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி

ஃபேஸ்புக்கின் கொள்கை முடிவுகளை மீறும் கணக்குகள் நீக்கப்படும் என்றும் இது போன்ற கணக்குகளில் இருந்து பரப்பபடும் தகவல்கள் குறைவாக பகிரப்படுவதற்கான வழிவகை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

பேஸ்புக்கில் இருக்கும் உள்ளடக்கங்களைச் சரிபார்க்க வேறு சில மூன்றாம் தரப்பு உண்மை சரிபார்ப்பு நிறுவனங்களுடன்  இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு நெட்வொர்க்கால் சான்றளிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள எட்டு உண்மைச் சரிபார்ப்புகளுடன் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

கூகுள் ரகசியமாக ஃபேஸ்புக்கிற்கு உதவியது – அமெரிக்க மாகாண அரசுகள் குற்றச்சாட்டு

இந்தச் செயல்முறையில் கீழ், ஃபேஸ்புக்கில் தமிழ், பெங்காலி, அசாமி, மலையாளம் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில்  பதிவிடப்படும் உள்ளடக்கங்கள் சரிப்பார்க்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வெறுப்பு பிரச்சாரத்தையும், தவறான தகவல்கள் பரப்படுவதையும் தடுக்க இயலாததால், அந்நிறுவனம் ஏற்கனவே சர்வதேச விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE : REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்