அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முகநூல் கணக்கு வரும் 2023 வரை முடக்கப்படுவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, டிரம்பின் முகநூல் கணக்கை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, முகநூலின் விதிகளை மீறும் உலகத்தலைவர்கள் மீது இனி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகநூல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்,”இது எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களை அவமானப்படுத்தும் செயல்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 6 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளர் நடத்திய கலவரத்திற்கு பின்னர் அவரது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கணக்கு முடக்கப்பட்டதில் இருந்து இரண்டு வருடங்கள் வரை முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தக் கலவரத்திற்குப் பின்னர் அவரது ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது, இதே போன்று அவரது யூடூப் கணக்கும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘சென்னையில் பிரதமரைக் கொல்லும் தமிழ்ப் பெண்’ – தமிழர்களை எப்படி சித்தரிக்கிறது #TheFamilyMan2 ?
இதுகுறித்து தெரிவித்துள்ள முகநூல் நிறுவனத்தின் பன்னாட்டு விவகாரத்துறை தலைவர் நிக் கிளீக், “எங்களது எண்ணற்ற விதிகளை மீறியதால் புதிய செயல்பாட்டு நடைமுறையின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
source; reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.