இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால், இரண்டு நாட்களாக முகநூல் மற்றும் மெசெஞ்சர் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
மோடியின் வருகைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் சேவை முடக்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ள முகநூல் நிர்வாகம், “நாங்கள் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு, விரைவில் சேவையைத் திரும்ப வழங்கவோம் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளது.
முகநூல் முடக்கம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலையும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் அலுவலகம் தெரிவிக்கவில்லை.
கொரோனா தொற்று நோயைச் சமாளிக்க பயனுள்ள தகவல் தொடர்பு சேவைகள் தேவைப்படும் நேரத்தில், வங்கதேசத்தில் முகநூல் கட்டுப்படுத்தப்பட்ட விதம்குறித்து தனது கவலைகளைத் தெரிவித்துக்கொள்வதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
‘ஊரடங்கு தீர்வல்ல; இனி கொரோனாவுடன் வாழ பழகுங்கள்’ – டெல்லி சுகாதாரத் துறை அமைச்ச்ர்
சிட்டாகாங்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் அமைப்பான ஹபிசாத்-இ-இஸ்லாம் அமைப்பு ஞாயிறன்று (மார்ச் 28) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்ததன் 50வது ஆண்டுக் கொண்டாட்டம் மற்றும் அந்நாட்டின் தேசதந்தையும், தற்போதையை பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 26) மோடி வங்கதேசம் சென்றது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.