2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்திய அரசு கோரும் பேஸ்புக் பயனர்களின் தரவுகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, 40,300 கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மொத்தம் 45,275 கோரிக்கைகள் வந்துள்ளன. பேஸ்புக் தனது சமீபத்திய அறிக்கையில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான கோரிக்கைகளுக்கான தரவைத் அரசிடம் சமர்பித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள அரசுகளால் சுமார் 2,11,055 கோரிக்கைகள் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளன என்றும், அவற்றில் கிட்டத்தட்ட 71 விழுக்காடு கோரிக்கைகளுக்கான தரவுகள் அந்தந்த அரசுகளிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன என்றும் டெக்ஜெயிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பேஸ்புக் பயனர் தரவு கோரிக்கைகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கடந்த ஆறு மாதங்களில், மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான இணைய சேவை தடைகளை இந்தியா கண்டுள்ளது. தரவரிசையில் இந்தியாவின் இடமானது, எத்தியோப்பியாவுக்கும் மியான்மருக்கும் அடுத்து உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாத இறுதி காலாண்டில் வெறுக்கத்தக்க உள்ளடக்கம்(ஹேட் ஸ்பீஷ் கண்டெண்ட்) 0.03 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், 2.23 கோடி வெறுக்கத்தக்க உள்ளடக்கத்திற்கு மேல் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.