Aran Sei

இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் குழுக்களை முகநூல் நிறுவனம் கட்டுப்படுத்தவில்லை – மக்கள் உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டு

முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துகள் பரப்படுவதை கட்டுப்படுத்துவதில் முகநூல் நிறுவன அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதாக இஸ்லாமிய வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துகள் பதிவிடுவதை பெருமளவில் கட்டுப்படுத்தி வருவதாக முகநூல் நிறுவனத்தின் முதன்மை அலுவலர்களான மார்க் ஸக்கர்பர்க் மற்றும் ஷெரில் சாண்ட்பெர்க் ஆகியோர் தெரிவித்திருந்ததற்கு எதிராக இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – இரண்டு நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதாக முகநூல் தகவல்

மேலும் , முகநூல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்த்துள்ளதாகவும் மக்கள் உரிமை அமைப்பினர் கூறியுள்ளனர்.

கடந்த வருடம் 22.1 மில்லியன் வெறுக்கத் தக்க கருத்துகள் முகநூலில் பதியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 97% செயற்கை நுண்ணறிவு துறையின் வழியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் முகநூல் – வைகோ குற்றச்சாட்டு

வடகலிபோர்னியாவில் உள்ள எலன் பல்கலைக்கழக பேராசிரியர் மேகன் சுஸ்யுர் கடந்த 2018 “முகநூலில் இஸ்லாமியர்கள்குறித்து எதிரான வெறுக்கத் தக்க கருத்துகள் பதிவிடும் குழுக்கள்” குறித்து வெளியிட்டுள்ள ஆய்வில் அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான 201 முகநூல் குழுக்கள் கண்டறியப்பட்டதாகவும், அதில் 100 குழுக்கள் இன்றுவரை நீக்கப்படாமல் செயல்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் நிலவும் பாகுபாடுகள் – பதவி விலகும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள்

மேலும், முகநூல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துகள் பதிவிடுவதை கட்டுப்படுத்துகிறது என்று பொய்யாகக் கூறுகிறது என்றும் கூறியுள்ளனர்.

SOURCE: THE HINDU 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்