Aran Sei

50 கோடி பேஃஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளன: பிசினஸ் இன்சைடர் இணையதளம் தகவல் – பாதுகாப்பானதா பேஃஸ்புக்?

ம்பது கோடிக்கும் அதிகமான பேஃஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் தொடர்பான தகவல்கள் ஹேக்கர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் கசிந்திருக்கிறது.

இந்தத் தகவல்கள் பல ஆண்டு பழமைதாக இருக்கிறது என்று கூறும் பேஃஸ்புக், பேஃஸ்புக் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களில் சேகரிக்கப்படும் தகவல் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இணையத்தில் தரவுகள் கிடைப்பது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் இணையதளம் முதலில் செய்தி வெளியிட்டது. 106 நாடுகளைச் சேர்ந்த பயனாளர்களின் கணக்குகள், செல்போன் எண்கள், முழுப்பெயர், இருப்பிடம், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்கள் கசிந்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

பேஃஸ்புக் இணையதளம் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தரவுகள் கசிவு பிரச்னையில் இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில், மாபெரும் சமூக ஊடக அரசியல் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 8.7 கோடி பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து செல்போன் எண் கொண்டு ஒரு பேஃஸ்புக் கணக்குகளைத் தேடும் வசதியை பேஃஸ்புக் முடக்கியது.

டிசம்பர் மாதம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த  பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்,  2.67 கோடிக்கும் அதிகமான பேஃஸ்புக்  பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட தரவுத்தளத்தைக் கண்டறிந்ததாகத் தெரிவித்திருந்தார். தற்போதைய தகவல்கள் இந்தத் தரவுத்தளத்திற்கு தொடர்புடையதா என்பது தெளிவாக இல்லை.

“இது 2019 ஆம் வெளியிடப்பட்டிருந்த தரவுகள்,” என்று கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட மென்லோ பார்க் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. “நாங்கள் இந்தச் சிக்கலைக்கண்டறிந்து ஆகஸ்ட் மாதம் சரிசெய்தோம்.” என பேஃஸ்புக் தெரிவித்துள்ளது.

Source : AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்