Aran Sei

‘ஜாஸ்ன்-இ-ரிவாஸ் என்ற பெயரில் விளம்பரத்தை வெளியிட்ட ஃபாப் இந்தியா நிறுவனம் – இந்துத்துவவாதிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து விளம்பரம் திரும்ப பெறப்பட்டது

பாப் இந்தியா நிறுவனம், அவர்களின் திபாவளி பண்டிக்கைக்கான ஆடைகளில் ‘ஜாஸ்ன்-இ-ரிவாஸ் (பாரம்பரியத்தின் கொண்டாட்டம்)’ என்ற பெயரில் வெளியிட்டதற்கு இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்துக்களின் பண்டிக்கை கொண்டாடும் விளம்பரத்தில், உருது மொழியில் பெயர் வைப்பதன் மூலம் திபாவளியை ஃபாப்இந்தியா சிதைப்பதாக இந்துத்துவவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு: ‘இலங்கையின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்’ – ராமதாஸ்

ஃபாப்இந்தியா வெளியிட்டிருந்த விளம்பரத்தில், “பட்டின் சலசலப்பு… ஜரிகையின் மினுமினுப்பு … நகைகளின் பிரகாசம் … மலர்களின் வாசனை… மிதமான இனிப்பு & வீடு திரும்புதலில் மகிழ்ச்சி. விழாக்கள் ஜாஸ்ன்-இ-ரிவாஸ் உடன் தொடங்கட்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்ப்புகளுக்குப் பிறகு விளம்பரத்தைத் திரும்பப் பெற்ற ஃபாப்இந்தியா நிறுவனம், “ஜாஸ்ன்-இ-ரிவாஸ் என்பது திபாவளி ஆடைகளுக்கான தொகுப்புகள் அல்ல, திபாவளிக்கான ’ஜில் மில் சே திவாளி’ இன்னும் தொடங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு : யார் இவர் ?

இது ’இந்துக்களின் பண்டிகையை ஆபிரகாமயமாக்குதல்’ என கூறியுள்ள பாஜகவின் இளைஞர் அணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, “தீபாவளி என்பது ஜாஸ்ன்-இ-ரிவாஸ் அல்ல. இந்து பண்டிகைகளை ஆபிரகாமயமாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சி. பாரம்பரிய உடை அணியாதவர்கள் இடம்பெறும் விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டும். இது போன்ற திட்டமிட்ட தவறுகளை மேற்கொள்ளும் ஃபாப்இந்தியா போன்ற நிறுவனங்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

”ஃபாப்இந்தியா மதசார்பற்ற நிறுவனமாக இருந்தால், மதசார்பற்றவர்களுக்கு சேவை செய்யட்டும். நாங்கள் வேறு நிறுவனத்தைப் பார்த்துக் கொள்கிறோம்” என பாஜகவின் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தால் 5000 ரூபாய் நிதி – பழங்குடிகளை காவிமயமாக்குகிறதா குஜராத் பாஜக அரசு?

ஃபாப்இந்தியாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்வரா பாஸ்கர், எழுத்தாளர் சுனாலி  குல்லர் ஷெரப் ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.

டாடா குழுமத்திற்கு சொந்தமான நகை நிறுவனமான தனிஷ்க் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஃபாப் இந்தியாவின் விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்