Aran Sei

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

ந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வருமானம் இல்லாத கோவில்கள் முறையான பராமரிப்பின்றி இருக்கின்றன என குற்றம்சாட்டியிருந்த ஜக்கி வாசுதேவ், தமிழக கோவில்களின் நிர்வாகத்தை, தமிழ் சமூகத்தில் நற்பெயர் பெற்ற மக்கள் அடங்கிய கமிட்டியிடம் வெளிப்படையாக அமைக்க ஆவண செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில், இந்தக் கோரிக்கையை இடம்பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

கோவில்களின் சொத்து விவரத்தை அரசு அறிக்க வேண்டும் – இல்லையென்றால் போராட்டம் நடக்குமென கிருஷ்ணசாமி எச்சரிக்கை

அவரது கோரிக்கைக்குத் தமிழக அரசிடம் இருந்தோ, அரசியல் கட்சிகளிடமிருந்தோ எந்தப் பதிலும் வராத நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்புற தணிக்கை செய்ய வேண்டும். கோவில்களின் கட்டிட அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலப் புலங்கள், கோவில்களின் அசையும், அசையா சொத்துக்கள், அவை யார் வசம் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன? அவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை மற்றும் அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள், கோவில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா? அவற்றின் நிலவரம் என்ன, மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம், கோவில் சார்ந்த செலவுகள் ஆகியன ஆய்வுசெய்ய வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

மேலும், “வல்லுநர்களையும் சான்றோர்களையும் கொண்டு கமிஷன் அமைத்து, கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், கோவில் சடங்கு சம்பிரதாயங்களை முறையாய் கடைபிடிக்க வழிசெய்து, சமூகத்திடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை வழங்கத் தேவையானவற்றை ஆய்வுசெய்ய வேண்டும்” என ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.Source : News 18

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்