Aran Sei

பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக பரோல் நீட்டிப்பு -தமிழ்நாடு அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு  ஐந்தாவது முறையாகப் பரோலை  நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனைப் பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 29 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனின் உடல்நிலையைக்  காரணமாகக் காட்டி,   அவருக்குப் பரோல் வழங்க வேண்டுமென  அவரது தாய் அற்புதம்மாள்  கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொண்ட  தமிழ்நாடு அரசு, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி முப்பது நாட்கள் பரோல் வழங்கித் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நான்கு முறை பரோல் நீட்டிக்கப் பட்ட நிலையில்,  நான்காவது பரோல் முடிவடைய இருந்த நிலையில்  தற்போது ஐந்தாவது முறையாகப்  அக்டோபர் 26-ஆம் தேதிவரை பரோலை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனின் விடுதலைக் குறித்து ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து  கடந்த செப்டம்பர் 6 அன்று  தெரிவித்திருந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், விடுதலை செய்யக்கோரி கடந்த கடந்த 2015 ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன்  தாக்கல் செய்த மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒராண்டு கடந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்