கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வல்லுநர்களின் பரிந்துரைகளை இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதாகக் கூறி 185 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்புகள் இந்து மதத்தையும் இந்தியாவையும் வடிவமைத்த வரலாறு – ரொமிலா தாப்பருடன் நேர்காணல்
வரலாற்றறிஞர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் மற்றும் பொருளாதார அறிஞரான கௌஷிக் பாசு ஆகியோர் உள்ளிட்ட 185 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், “இந்திய ஒன்றிய அரசு வல்லுநர்களின் பரிந்துரைகளை புறக்கணிக்கிறது. அனைத்து கட்சிகள், மாநில அரசுகள், வல்லுநர்களை ஒன்றிணைத்து தேசிய குழுவொன்றை அமைத்து, இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“வேத கலாச்சாரம், முகலாயர்கள் அன்னியர்கள்” – வரலாற்றை மாற்றச் சொல்லும் வலதுசாரிகள்
மேலும், இறந்தவரின் சடலங்கள் சாலைகளில் கிடப்பது, ஆறுகள் மற்றும் ஆற்றங்கரைகளில் மிதப்பது ஆகியவை உலகின் கூட்டு மனசாட்சியை உலுக்கியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.
அதுமட்டுமல்லாது, எண்ணற்ற மக்கள் போதிய அடிப்படை மருத்துவ வசதிகளான மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இன்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், “பெரும் கூட்டங்களுக்கும், மத சடங்குகளும் நடத்த அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றை அதிகரிக்க எவ்வித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாக அந்தக் கடிதத்தில்தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.