Aran Sei

தமிழகத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு

Image Credits: DNA India

ப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்திற்கு 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்திற்கு 8 கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. மே 2 ஆம் தேதி தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்திற்கான கடைசிக்கட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்ததை அடுத்து, 5 தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகியது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெறும் – டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் கருத்துக்கணிப்பு தகவல்

இதில் ரிப்பளிக் தொலைக்காட்சியும் சிஎன்எக்ஸ்  நிறுவனமும் இணைத்து வெளியிட்டிருக்கும் கருத்துகணிப்பில், திமுக கூட்டணி  160 முதல் 170 இடங்களில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும், அமமுக கூட்டணி 4 முதல் 6  இடங்களிலும், மக்கள் நீதி மையம் 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

பி – மார்க்  நிறுவனம் வெளியிட்டிருக்கும் முடிவுகளில், திமுக கூட்டணி  165 முதல்  190 இடங்களிலும், அதிமுக கூட்டணி  40 முதல் 65 இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், அமமுக கூட்டணி  1 முதல் 3 இடங்கள் வரையும், மற்றவர்களுக்கு  1 முதல்  6 இடங்கள் வரையும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் முடிவு

ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிட்டிருக்கும் கருத்துகணிப்புகளில், திமுக கூட்டணி 160 முதல்  172 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி  58 முதல்  70 இடங்களிலும், மற்றவர்கள் 7 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று இந்தியா டுடே தொலைக்காட்சியும் மை ஆக்சிஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்டிருக்கும் முடிவுகளில் திமுக கூட்டணி  175 முதல்  195 இடங்களிலும், அதிமுக கூட்டணி  38 முதல்  54 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. மேலும் அமமுக கூட்டணி  1 முதல்  2  இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 2 இடங்கள் வரையும் வெற்றி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்