Aran Sei

புதினுக்கு எதிராக வெறுப்பு பதிவுகள் அனுமதிக்கப்படும் – ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவிப்பு

Credit : Reuters

ஷ்யப் படையினருக்கு எதிராகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை ஃபேஸ்புக் மற்றும் மெட்டாவில் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறுப்பு பேச்சு கொள்கையில் தற்காலிகமாக திருத்தம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் அந்நிறுவனம், இது போன்ற பதிவுகளையிட சில நாடுகளைச் சேர்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை அனுமதிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

யாருக்கு எதிராகவும், எந்த வகையிலும் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையைப் பேஸ்புக் மாற்றி இருப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் ஆம் ஆத்மியின் ராம ராஜ்யமும் – நந்தா

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையிலான பதிவுகளையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தங்களது கொள்கைக்கு விரோதமானதுதான் என்றாலும் கூட உக்ரைன் ஊடுறுவலுக்கு எதிரான தங்களது சிறிய பங்களிப்பாக இருக்கும் என்று மெட்டா கூறியுள்ளது.

அதே நேரத்தில் ரஷ்ய மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகளை அனுமதிக்க போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தீவிரவாத செயல்களை மெட்டா நிறுவனம் ஊக்குவிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனு – விசாரணைக்கு ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

மெட்டா நிறுவனத்தின் மீது அமெரிக்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

பாரபட்சமாக நடந்து கொள்ளும் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் மீதான நம்பகத்தன்மையை வெகுவாக சீர்குலைகுக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source : Reuters

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்