Aran Sei

கர்நாடகா எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு – ஹிஜாய் அணிந்த தேர்வு பார்வையாளர் பணியிடை நீக்கம்

ர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் ஹிஜாப் அணிந்திருந்ததற்காக தேர்வு பார்வையாளராக இருந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹிஜாப் தடை விவகாரத்திற்கு பிறகு, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. இதில், 8  லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கர்நாடகா: ஹிஜாபை கழட்ட சொன்னதால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் வீட்டுக்கு திரும்பிய மாணவி

நேற்று ஷிமோகா மாவட்டத்தில், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. இதனை ஏற்று ஹிஜாபை அகற்றிய பெரும்பாலான மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஹிஜாபை அகற்ற மறுத்த 8 மாணவிகள் தேர்வுகளை புறக்கணித்து வீடுகளுக்குத் திரும்பினர்.

இதே போல பாகல்கோட்டை, பீஜாப்பூர், சிக்கமகளூரு, கோலார், உடுப்பி உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அகற்ற மறுத்ததால் தேர்வைப் புறக்கணித்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கே.எஸ்.டி.வி. உயர்நிலைப் பள்ளியில், தேர்வு பார்வையாளராக ஆசிரியை நூர் பாத்திமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்ததை அறிந்த கல்வித்துறை அதிகாரி, ஹிஜாபை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளார்.

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

இதனை ஏற்க மறுத்த நூர் பாத்திமா, “கர்நாடகா கல்வித் துறை ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எனது ஹிஜாபை அகற்ற முடியாது” என கூறியுள்ளார்.

இதனால், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்ட நூர் பாத்திமா, பின்னர் ஒரு மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்வதாக கல்வித்துறை ஆணை பிறப்பத்துள்ளது. கல்வித்துறையின் இந்த செயலிற்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu Tamil

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்