Aran Sei

விவசாயிகளின் சுதந்திர நாள்: போராட்ட களத்தில் அணிவகுப்பு நடத்திய முன்னாள் ராணுவ வீரர்கள்

ன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், 75 வது சுதந்திர தினத்தையொட்டி கடைப்பிடித்த ‘கிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்‘ (விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம்)-ல், முன்னாள் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 15), டெல்லி சிங்கு எல்லையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மூவர்ண கொடியேற்றத்துடன் சில பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக, விவசாயிகள் சங்க தலைவர் ரமிந்தர் சிங் பாட்டியாலா கூறுகையில், “டெல்லி சிங்கு எல்லையில் மூவர்ணக் கொடியை மூத்த விவசாயத் தலைவர் சத்னம் சிங் (85) காலை 11 மணியளவில் ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களின் ராணுவ உடையுடன் அணிவகுப்பு நடத்தினர். ஜலந்தரில் உள்ள டிஏவி கல்லூரி மாணவர்கள் ஒன்றரை மணி நேரம் பாங்ரா நடனம் ஆடினர்.” என்று கூறியுள்ளார்.

விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம் குறித்து, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகைகளில் நடைபெற்ற ‘மூவர்ணக்கொடி யாத்திரைகளில்’ லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துக்கொண்டுள்ளனர். ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில், விவசாயிகள் பாத யாத்திரையை மேற்கொண்டனர். அதில், தங்கள் வயலில் இருந்து எடுக்கப்பட்ட மண் மற்றும் தங்கள் கிராமங்களின் தண்ணீருடன் மூவர்ணக் கொடியை கைகளில் ஏந்தியப் படி பாத யாத்திரை சென்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் டெல்லி திக்ரி எல்லை மற்றும் காசிப்பூர் எல்லையிலும் விவசாயிகளின் மூவர்ணக்கொடி யாத்திரையை நடத்தியுள்ளனர்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம் : சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடி பேரணி நடத்த போராடும் விவசாயிகள் திட்டம்

‘பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள்’ – ராகேஷ் திகாயத்

விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களாக எதிர்கட்சிகள் உறுப்பினர்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்