Aran Sei

பற்றாக்குறையால் தடுப்பு மருந்து செலுத்தும் பணி நிறுத்தம்: தமிழகத்திற்கு தேவையான தடுப்பு மருந்துகள் வழங்க ஒன்றிய அரசுக்கு விஜயபாஸ்கர் கோரிக்கை

ற்றாக்குறையால் தடுப்பு மருந்து செலுத்தும் பணி 3 நாட்கள் நிறுத்தபப்டுவதால், தமிழகத்திற்கு தேவையான தடுப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்க, தாங்கள் வழி செய்ய வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 1), தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “மாண்புமிகு ஹர்ஷ வர்தன், சார், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகள் போதிய கையிருப்பு இல்லையென்பதால், ஜூன் 3 முதல் தடுப்பு மருந்து செலுத்தப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில், தமிழக மக்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்க பெற, தாங்கள் வழி செய்துக்கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 31), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கடந்த மாதம், தமிழகத்துக்கு இரண்டு மடங்குக்கும் மேலாக தடுப்பு மருந்து டோஸ்கள் ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், அவற்றில் 1.74 லட்சம் தடுப்பு மருந்துகள் வரவேண்டியுள்ளது. கையிறுப்பில் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளே உள்ளன.” என்று தெரிவித்திருந்தார்.

‘பற்றாக்குறையால் பூட்டப்பட்டுள்ள தடுப்பு மருந்து மையங்கள் குறிக்கோளற்ற தடுப்பு மருந்து கொள்கைக்கு சான்று’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

மேலும், “ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பு மருந்து டோஸ், ஜூன் 6 ஆம் தேதிதான் வரும். ஆகவே, ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் வரும் வரைக்கான இடைப்பட்ட காலமான ஜூன் 3 தொடங்கி, ஜூன் 6 வரை தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நிறுத்தப்படுகின்றன.” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்