Aran Sei

‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததால் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை விசாரித்த காவல்துறை’ – கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறதா அரசு?

credits : the indian express

த்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூர்யா பிரதாப் சிங்கிற்கு, ட்விட்டரிடமிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அவரது ட்வீட்டின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உங்கள் ட்விட்டர் கணக்கில் இருந்து செய்யப்பட்ட ட்வீட்டுகளின் உள்ளடக்கம் இந்தியாவின் சட்டங்களை மீறுவதாக உள்ளது என்று கூறி, அதன் மேல் நடவடிக்கை எடுக்க இந்திய சட்ட அமலாக்கத்துறையிடமிருந்து ஒரு கோரிக்கையைப் பெற்றுள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு நாங்கள் இக்கடிதத்தை எழுதுகிறோம்.” என்று அவர் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், “இந்த நோட்டீஸின் வழியாக, உத்தரபிரதேச அரசு எனது ட்விட்டர் கணக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்புகிறது என்பது தெரிகிறது. இதற்கான நோக்கம் என்ன? எனது ட்விட்டர் கணக்கை நீக்குவதா? எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா? நீங்கள் ஏன் விமர்சனத்திற்கு பயப்படுகிறீர்கள்? ஜனநாயகத்திற்கு விரோதமான சிந்தனைகளை விதைக்கிறீர்களா?” என்று அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

மேலும், “இதுதொடர்பாக, எனது இல்லத்தில் ஆறு மணி நேரம் உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தினர். உண்மையின் பாதை சிரமங்களால் நிறைந்தது. ஆனால், நான் தொடர்ந்து அப்பாதையில் நடைபோடுவேன்.” என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூர்யா பிரதாப் சிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்