”இந்த பட்ஜெட் பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கியது” என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய ப.சிதம்பரம் “கடந்த ஆண்டு இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம், பொருளாதாரம் ”தீவிர சிகிச்சைப் பிரிவில்” இருக்கிறது என்று கூறியதை நான் நினைவுகூற விரும்புகிறேன். இந்த தேசம் 8 காலாண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” என்று தெரிவித்தார்.
நான் ஒரு பெருமை மிக்க ‘அந்தோலன் ஜீவி’ – பிரதமரின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
”பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சினைகளான பண பரிவர்த்தனைகள், உணவு தானியங்களை இலவசமாக ஏழைகளுக்கு வழங்குவது ஆகியவற்றை செய்ய சொல்லி நாங்கள் கெஞ்சினோம். ஆனால் வறுமையில் இருப்பவர்களிடத்தில் பணமும் ரேஷனும் சென்று சேர்க்கப்படவில்லை” என்று கூறிய ப.சிதம்பரம், “தகுதியற்ற பொளாதார மேலாண்மையால், நம்முடைய பொருளாதாரம் 2017-18 ஆம் ஆண்டு இருந்த இடத்திற்கு தற்போது வந்துள்ளது. இந்த அவையில் அவதூறான வார்த்தையை பயன்படுத்த கூடாது என்பதனால் ”தகுதியற்ற” என்ற வார்த்தையுடன் நான் நிறுத்தி கொள்கிறேன்” என்று கூறினார்.
அழிவுப்பாதைக்குச் செல்லும் இந்திய பொருளாதாரம் – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
சுமார் 64 லட்சம் தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 22 சதவீதம் பெண்கள் எனவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
28 லட்சம் மக்கள் இன்று தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கும் போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், உள்நாட்டு உற்பத்தியை நிலையாக்குவதற்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என அவர் தெரிவித்தார்.
’கேரள, தமிழக தேர்தலில் தோற்றால் பாஜக-வின் கொட்டம் அடங்கும்’ – ப.சிதம்பரம்
“நீங்கள் இந்தியாவின் பெரும்பகுதியை புறக்கணித்துவிட்டீர்கள். இந்த பட்ஜெட் யாருக்கானது? என்று கேள்வியெழுப்பிய சிதம்பரம், ”கொரோனா தொற்று பரவலுக்கு எப்படி நீங்கள் (பாஜக அரசு) காரணம் இல்லையோ, அதே போன்று தான் கொரோனா தொற்று பரவல் குறைந்ததற்கும் நீங்கள் காரணமில்லை” என்று ப.சிதம்பரம் கூறினார்.
’5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஆட்சி; கரை வேட்டிகளாகும் அரசு அதிகாரிகள்’ – ப.சிதம்பரம்
”இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்களே உருவாக்கியது. இந்த பட்ஜெட்டில் ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், ரேஷனுக்கு காத்திருக்கும் மக்களுக்கும் எதுவுமில்லை” என்று கூறிய ப.சிதம்பரம், போராட்டங்கள் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக. ”எனவே, இதை எதிர்த்து நாம் கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பால் அவர்கள் நம்மை அந்தோலன் ஜீவி என அழைப்பர்” என்று தெரிவித்தார்.
தலைப்புச் செய்திகளுக்காக அறிவிப்புகள் விடும் பாஜக – ப.சிதம்பரம் விமர்சனம்
”இந்த பட்ஜெட்டை நாங்கள் மக்கள் பெயரில் நிராகரிக்கிறோம், ஏழைகளுக்கு பணப்பரிமாற்றம், ரேஷன் மற்றும் உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், வன்முறையற்ற அமைதியான போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள்” எனவும் முனனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.