Aran Sei

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்

credits : the indian express
2021 ஜூலை 29 ஆம் தேதி அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி NEET மருத்துவ சேர்க்கைக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு(EWS) 10% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரித்தது.
இந்தாண்டு மட்டும் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வை ஒன்றிய அரசின் அறிவிப்பின்படியே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு(EWS) 10% இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை(EWS) நிர்ணயிப்பதற்கான பொருளாதார அளவுகோல்களை மறுபரிசீலனை செய்வதால் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு சேர்க்கையில் (NEET-PG) தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (EWS) பொருளாதார அளவுகோலாகப் பழைய 8 லட்சம் குடும்ப வருமானமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான  27% இட ஒதுக்கீட்டை  அரசியலமைப்பு சட்டப்படி உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி NEET மருத்துவ சேர்க்கைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை 2022 மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் நடக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source : The Hindu
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்