முதுகலை மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவுத்தேர்வு சேர்க்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவினரின் இட ஒதுக்கீடு தொடர்பான மனுவை ஒன்றிய அரசு அவசரமாக விசாரிக்க கோரியதை அடுத்து நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை(EWS) நிர்ணயிப்பதற்கான பொருளாதார அளவுகோல்களை மறுபரிசீலனை செய்வதால் முதுகலை மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவுத்தேர்வு சேர்க்கையில் (NEET-PG) தாமதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து இந்தியாவெங்கும் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.